இந்திய பாகிஸ்தானிற்கிடையிலான முரண்பாடுகள் கிரிக்கட் போட்டிகளிலும் வெளிப்பட ஆரம்பித்துள்ளன.
அண்மையில் ஆசிய கிண்ணத்தில் இடம்பெற்ற இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றியின் பின்னர் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்குவதை இந்திய வீரர்கள் புறக்கணித்தமை சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் தமது அணி ஆசிய கிண்ணத்தை வெல்லுமாயின், ஆசிய கிரிக்கட் கவுன்சிலின் தலைவரான மொஹ்சின் நக்வியின் கரங்களால் கிண்ணத்தை வாங்கமாட்டோம் என இந்திய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் நாட்டவர் என்பதுடன், பாகிஸ்தான் கிரிக்கட் நிறுவனத்தின் தலைவராகவும் காணப்படுகின்றார்.



