அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். நேற்று (09) இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடக்காது என உறுதியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி டிரம்ப், கத்தாரை ஒரு வலுவான கூட்டாளியாகவும், நண்பராகவும் பார்க்கிறார். இஸ்ரேலினால் தாக்கப்பட்டதில் மிகவும் வருத்தப்படுகிறார் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.



