ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்றுள்ள வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சம்பவங்கள் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் இந்தியாவுக்கு பயணித்துள்ள சூழ்நிலையில்
இடம் பெற்றுள்ளன என
சர்வதேச ஊடக சுட்டிக்காட்டியுள்ளன.
இவ்விடயமாக முழு விசாரணை இடம் பெற்று வருவதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க உத்தியோகபூர்வ பேச்சாளர் சபீஹுல்லா முஜாஹிட் கூறியுள்ளார்
இதே வேளை பாகிஸ்தானின் வட மத்திய பிரதேசத்தில் இடம்
பெற்ற சம்பவம் ஒன்றில் ஒரு பாகிஸ்தான் இராணுவ அதிகாரி
உட்பட போராளி அமைப்பு
ஓன்றின் 7 வீரர்கள் மரணித்து உள்ளதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது
அத்துடன் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
ஆப்கானிஸ்தானின் TTP அமைப்புக்கு ஆப்கனிஸ்தான் அடைக்கலம்
மற்றும் உதவிகளை வழங்கி வருவதாகவும் பாகிஸ்தான் அரசாங்க தரப்பு குற்றம் சாட்டியுள்ளது
ஆப்கன் வெளிநாட்டு அமைச்சரின் இந்திய விஜயத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் காபூலில் தாக்குதல்



