ஆம்புலன்ஸ் விபத்தில் பியர் கேன்கள் கண்டுபிடிப்பு – ஓட்டுநர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்

தெனியாய பகுதியில் இருந்து மாத்தறை நோக்கி இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ், மொரவக்க எல பகுதியில் விபத்துக்குள்ளானது.

ஆம்புலன்ஸ் வீதியை விட்டு விலகி ஒரு வீட்டு நுழைவாயிலில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தை பரிசோதித்த பொலிஸார், ஆம்புலன்ஸின் உள்ளே இரண்டு பியர் கேன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற வேளையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். பின்னர் அவர் பொலிஸில் சரணடைந்தார்.

விபத்தின் போது ஓட்டுநர் மதுபோதையில் இருந்தாரா என்பதற்கான விசாரணைக்காக, அவரை மாத்தறை பொது வைத்தியசாலையின் தடயவியல் வைத்தியரிடம் அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top