உலகெங்கும் செப்டம்பர் 08ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
1966ம் ஆண்டு தொடக்கம் இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது.
எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
2011 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது.
இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். 100 சதவீத எழுத்தறிவு என்பதை நோக்கி முன்னேற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எழுத்தறிவு சதவீதத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் கேரளா உள்ளது.
இப்பட்டியலில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. பீகார் கடைசி இடத்தில் உள்ளது.



