செப்டம்பர் 9 ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கத்தார் உள்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரி பத்ர் சாத் முகமது அல்-ஹுமைதி அல்-தோசாரியின் நினைவாக, அல் வக்ரா பகுதியில் உள்ள ஒரு வீதிக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கத்தார் நகராட்சி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, அந்த வீதி அல்-தோசாரியின் தந்தையின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அதிகாரியின் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கத்தார் அரசின் இந்த முடிவு பொதுமக்களிடையே பாராட்டை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த அதிகாரியின் பெயரை வீதி ஒன்றுக்கு சூட்டிய கத்தார் அரசு



