மதீனாவுக்கு அருகில் இந்திய உம்ரா யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து டீசல் டாங்கருடன் மோதி ஏற்பட்ட கொடூர விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என சவூதி அரேபிய ஊடகங்கள் ஆரம்ப தகவலை வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை, உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் முஃப்ரிஹாத் பகுதியில் நடந்துள்ளது. மக்காவில் இருந்து மதீனாவிற்கு புறப்பட்ட யாத்திரிகர்கள் பேருந்தில் மொத்தம் 43 பேர் பயணம் செய்திருந்த நிலையில், ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நபர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
⭐ துயரத்தை அதிகரிக்கும் விவரங்கள்
மக்தூப் மீடியா குறிப்பிட்டதாவது, பேருந்தில்
சுமார் 20 பெண்கள் 11 குழந்தைகள் உட்பட பலர் பயணம் செய்திருந்தனர். அவர்கள் பலரும் தூக்கத்தில் இருந்ததால் தீ விபத்து ஏற்பட்ட போது தப்பிக்க வாய்ப்பு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்கான துல்லியமான உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை; மீதமுள்ளவர்கள் இருப்பதா என்பதைச் சவூதி அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்.
⭐ தெலுங்கானா அரசு அவசர நடவடிக்கை
இந்தியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்,
தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நவதில்லி மற்றும் ரியாத் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில்,
மாநில தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ண ராவ் டெல்லியில் உள்ள ரெசிடென்ட் கமிஷனர் கவுரவ் உப்பால்
என்பவர்களுடன் உடனடி தகவல் சேகரிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இந்த பேருந்தில் இருந்தனர் என்பதை அவசரமாகத் தெரிவிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.
⭐ இந்திய தூதரகம் 24×7 உதவி மையம் திறப்பு
இந்திய தூதரகம் (CGI Jeddah) உடனடியாக
24×7 கட்டுப்பாட்டு அறை (Control Room) அமைத்து அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள இந்திய பிரஜைகள் இந்த உதவி எண்களைத் தொடர்புகொண்டு விபத்து தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளைப் பெறலாம்.



