மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் புனரமைப்புப் பணிகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் மீட்பு
இந்த விடயம் குறித்து, ரவைகளை மீட்க நீதிமன்ற அனுமதி கோரி ஊர்காவற்றுறை பொலிசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில், இன்று காலை ரவைகளை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கி ரவைகள் ! இன்று அதிரடிப்படையால் மீட்பு !!



