குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முகமாக ஒரு தந்தையாக அறிவுரைகூறி செயற்பட்ட நீதிபதிக்கு இடமாற்றம்!!

குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முகமாக ஒரு தந்தையை போன்று அறிவுரை கூறி வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக பயாஸ் ரஸ்ஸாக் செயற்பட்டு வந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

நீதிச்சேவை ஆணைக்குழுவினால் எதிர்வரும் 15.09.2025ஆம் திகதிமுதல் 106 நீதிபதிகளுக்கு இடாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றி வந்த பயாஸ் ரஸ்ஸாக் நுட்பமான முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இன்றி தீர்ப்புகளை வழங்கி வந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

அந்தவகையில் மொரவெவ சுற்றுலா நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியாக கடமையாற்றி வந்த திருமதி. கருப்பையா ஜீவராணி திருகோணமலை மாவட்ட நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

திருகோணமலை மாவட்ட பதில் நீதிபதியாக இருந்த பயாஸ் ரஸ்ஸாக் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் பெற்றுச் சென்று எதிர்வரும் 15 ஆம் திகதி கடமையை பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாவட்ட நீதிபதியாக திருகோணமலையை விட்டுச் செல்கின்ற நீதிபதி பயாஸ் ரஸ்ஸாக் அவர்களுக்கான பிரியாவிடை கடந்த வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றிருந்தது.

நீதிபதி பயாஸ் ரஸ்ஸாக் நீதவான் நீதிபதியாக இருந்த காலத்திலும் மாவட்ட பதில் நீதிபதியாக இருந்த காலத்திலும் சிறப்பாக சேவையாற்றியிருந்ததை நாம் நேரடியாக அவதானித்தோம்.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் பொலிஸார் இளைஞர்கள் ஒரு தடவை ஏதாவது குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தால் தொடர்ச்சியாக வழக்குகள் இல்லாமல் இருக்கின்ற நேரத்தில் மீண்டும் தேவையற்ற விதத்தில் குறித்த இளைஞர்களை விசாரணை என்று அழைத்துச் சென்று போதை மாத்திரைகளையும் போதைப் பொருட்களையும் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி மீண்டும் அவர்களுக்கு வழக்குகளை பதிவு செய்து வந்தனர்.

இதன் போது பொலிஸாரினால் முன் வைக்கப்பட்டிருந்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு மீண்டும் பாதிக்கப்பட்டவர்கள் கைகளை உயர்த்தி சொல்கின்ற கருத்துக்களை செவி சாய்த்து சிறந்த முறையில் தமது நீதியை நிலைநாட்டி வந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

அத்துடன் நீதவான் நீதிமன்றில் கடமையாற்றிய காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முகமாக ஒரு தந்தையாக அறிவுரைகூறி செயற்பட்டதையும், வயோதிபர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செவிமடுத்து கேட்பதையும் பலமுறை அவதானிக்க முடிந்தது.

அதுமட்டுமல்லாமல் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் 10, 15 வருடங்களாக போய்க் கொண்டிருக்கின்ற வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு காட்டுகின்ற அக்கறை இன்னும் பாராட்டப்படக்கூடிய விடயமாகும்.

எனவே திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொலிஸாருக்கு ஏற்ற விதத்தில் போடப்பட்ட போதைப் பொருள் தொடர்பிலான வழக்குகளில் இன்னும் நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் வருவதற்கு முன்னர் மொரவெவ நீதிமன்றில் பொலிஸார் தனக்கு ஏற்ற விதத்தில் தங்களுக்கு தேவைப்பட்டவர்களை கைது செய்து தங்களுக்கு ஏற்ற விதத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தி போதைப் பொருள் விற்பனை, கைக் குண்டுகளை வைத்திருந்தமை, துப்பாக்கிகளை தம் வசம் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி பல நபர்களை சந்தேக நபர்களாக கைது செய்து பாரிய விதத்தில் வழக்குகளை பதிவு செய்து வந்தனர்.

இவ்வாறான விடயங்களில் நீதிமன்றம் மிகவும் கரிசனையுடன் செயற்படுவதுடன், சந்தேக நபர்களாக பொலிஸார் கைது செய்து நீதிமன்றிற்கு அழைத்து வரும் போது சந்தேக நபர்களாக சந்தேக கூண்டில் இருக்கும் சந்தேக நபர்கள் சொல்கின்ற சில கருத்துக்களையும் குறித்த நீதிபதி பயாஸ் ரஸ்ஸாக் செவிமடுத்து கேட்பதை போன்று மற்றவர்களும் கேட்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொலிஸார் கூறுகின்ற விடயத்தை மாத்திரம் செவிமடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.

திருகோணமலை சிறைச்சாலைக்கு சென்று சிறை கைதிகளை கேட்டுப் பார்த்தால் திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரஸ்ஸாக் ஒரு கடவுள் என சொல்வார்கள். மற்றும் இவர் வழக்கு விசாரணைகளின் போது சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொடுக்கும் மதிப்பை பற்றியும் பெருமையாக பேசுவார்கள்.

இவ்வாறான நீதிபதிகளை பாராட்டுவதில் நாம் இன்னும் இன்னும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top