இந்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது…
கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த பேரூந்தானது வீதியோரம் நிறுத்தப்பட்டிருந் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேரூந்தின் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த முச்சகரவண்டியும் சிக்கியுள்ளது.
இந்த விபத்தின்போது முச்சக்கரவண்டி மற்றும் சொகுசு பேரூந்தின் முன் பகுதி என்பன பாரிய சேதத்தினை எதிர்கொண்டுள்ளது.
இந்த விபத்தில் பேரூந்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் அத்தோடு முச்சக்கரவண்டி சாரதி ஆகியோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற பேரூந்து காத்தான்குடியில் விபத்து.



