*செப்டம்பர் 12, 1958*முதல் Integrated Circuit கருவி அங்கீகரிக்கப்பட்ட தினம் இன்று.அமெரிக்க இயற்பியல் ஆய்வாளர் மற்றும் மின் பொறியாளரான ஜாக் கிளார் கில்பி முதல் ஒருங்கிணைந்த மின்சுற்றினை இதே நாளில் (செப்டம்பர்-12)வெற்றிகரமாக இயக்கி காண்பித்தார். இவற்றில் Resistor, Capacitor, Diode மற்றும் Transistor ஆகியவை பயன்படுத்தப்பட்டது. இக்கண்டுபிடிப்பு நாம் தற்போது பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களின் முன்னோடியாகும். இதற்காக 2000 ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் கையடக்க கணக்கிடும் கருவி, தெர்மல்(Thermal) அச்சுக்கருவி உட்பட தனது ஏழு முக்கிய கண்டுபிடிப்புகளை காப்புரிமை செய்தார். இவர் பின்னாளில் ராணுவம், பொதுப் பயன்பாட்டிற்கான கருவிகளை இயக்கும் மைக்ரோ சிப் தொழில்நுட்பங்களை வழங்கினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top