தாக்கா சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து — விமான சேவைகள் நிறுத்தம்!

பங்களாதேஷின் தலைநகரான தாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு பிரிவில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. கருமை புகை வானை மூடியதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

விமான நிலையப் பகுதியில் சேமிக்கப்பட்டிருந்த ரசாயனப் பொருட்கள் காரணமாக தீ அணைப்பு நடவடிக்கைகள் கடினமானதாக மாறியுள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

தீ விபத்து குறித்து பங்களாதேஷ் சிவில் விமான ஆணையம் (CAAB) கூறியதாவது:

“மதியம் 2.30 மணியளவில் எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், உடனடியாக 36 தீயணைப்பு அணிகளை அனுப்பினோம். விமானப்படை தீயணைப்பு பிரிவும் மீட்பு பணியில் இணைந்துள்ளது,” எனத் தெரிவித்தனர்.

விமானங்கள் தரையிறங்குதல் மற்றும் புறப்படுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் குறைந்தது 9 விமானங்கள் சத்தகிராம் மற்றும் சிலேட் விமான நிலையங்களுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளன.

ஆர்மி, நேவி, ஏர்ஃபோர்ஸ் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தீ பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாகத் தொடக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

👉 இது, கடந்த ஐந்து நாட்களுக்குள் பங்களாதேஷில் இடம்பெற்ற மூன்றாவது பெரிய தீ விபத்தாகும்.

Scroll to Top