எந்த தொழிற்சங்கமும் அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டத்தைத் தடுத்தால், அதன் தொடர்பில் முடிவு எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம். தொழில்நுட்பத்திற்கு பயப்படும் அல்லது புதிதாக ஏதாவது மேற்கொள்ள அஞ்சும் நாடு முன்னேறாது.
நாம் இயந்திரத்தனமானவர்கள் அல்ல. நாம் நெகிழ்ச்சியான மக்கள். எனவே, நிறுவனங்கள் இயந்திரமயமாக்கப்படும்போது ஊழியர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாங்கள் நன்கு புரிந்துகொண்டு அதற்கு தீர்வுகளை வழங்குவோம்.
கடந்த 8 மாதங்களில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 18.2 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளது. அந்த இலாபத்தை மக்களுக்கு நேரடியாக வழங்க முடியாது. எனவே, கல்வி மற்றும் சுகாதாரம் மூலம் அந்த இலாபத்தை மறைமுகமாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நமக்கு எல்லாம் தெரியாது. அறிவு உள்ள அனைவரும் கதைக்க வேண்டும். நாம் அனைவருக்கும் இடமளித்துள்ளோம். நிபுணர்கள் பேசாமல் இருப்பது அநியாயம் ஆகும்.
கொலன்னாவை பெற்றோலிய களஞ்சிய வளாகத்தில் ஆறு எண்ணெய்க் களஞ்சிய தாங்கிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
www.jaffnamuslim.com
நாங்கள் இரக்க உணர்வு கொண்டவர்கள். எனவே, 2022 ஆம் ஆண்டு எரிபொருள் வரிசைகளிலும் எரிவாயு வரிசைகளிலும் மக்கள் இறந்தது போன்ற ஒரு நெருக்கடி மீண்டும் ஏற்பட நாங்கள் இடமளிக்க மாட்டோம்.