புகையிரதத்தில் மோதிய பெண் . ஹட்டனில் சம்பவம்..

இன்று நண்பகல் 1.30 மணியளவில் பதுளை இருந்து கொழும்பு சென்ற புகையிரதத்தில் ஹட்டன் நுவரெலியா பிரதான பாதை அருகே ஹட்டன் புகையிரத கடவை அருகே இளம் பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டுள்ளார்.

இரயில் ஙடவைக்கு அருகில் உள்ள வாகன திருத்தும் நபர் ஒருவர் மற்றும் ரயில் பாதுகாவலர்கள்.பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் அப்பகுதியில் நீண்ட நேரம் இரயில் வரும் வரை இரயில் கடவை அருகில் காத்திருந்த தாகவும் அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Scroll to Top