தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திலுள்ள புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 12 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, ஆதரவாக 7 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஓர் உறுப்பினர் வாக்களிப்பிலிருந்து தவிர்த்துக்கொண்டதுடன், இதற்கமைய புத்தளம் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது.
மாநகர முதல்வர் எம்.எஃப். ரின்ஸாத் அஹமட், வரவு செலவுத் திட்ட அறிக்கை முதன்முறையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அது தோல்வியடைந்தது.
இதனையடுத்து, மாநகர முதல்வர் எம்.எஃப். ரின்ஸாத் அஹமட் சபையை நாளை வரை ஒத்திவைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
எனினும், இது மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்திற்கு முரணான செயற்பாடு எனவும், சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டு, 12 மாநகர சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று மாநகர சபை செயலாளர் ஊடாக மாநகர முதல்வரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
புத்தளம் மாநகர சபையிலும் NPP வரவு செலவுத் திட்டம் தோல்வி



