மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு வழங்க ஏற்பாடு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை துணைக் கட்டுப்பாட்டாளர்

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 வரை கடவுச்சீட்டுகளும் வழக்கமான சேவையின் கீழ் சுமார் 1000 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு பெற ஒரு நாள் சேவைக்கு 20,000 ரூபாவும் வழக்கமான சேவைக்கு 10,000 ரூபாவும் அறவிடப்படுகிறது. கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையில் ஏதேனும் தெளிவின்மை இருந்தால், கால தாமதங்கள் ஏற்படக்கூடும்.

எனவே, கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது மக்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழில் கவனம் செலுத்தி, அவை தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top