தேர்தல் நடத்தப்படாது கடந்த 10 ஆண்டுகளாக ஆளுநர்களின் நிர்வாகத்தில் இயங்கி வரும்
மாகாணங்களின் மாகாண சபை தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக மாகாண
சபைகள் பிரதி அமைச்சர் ருவன் செனரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானங்கள் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி தனது
வேட்பாளர் தெரிவு குறித்த ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
மாகாண சபை தேர்தல் அடுத்த வருடம்ஜூன் மாதம் ?



