அரசுக்குச் சொந்தமான 4 நிறுவனங்களில் இணைய இணக்கம்
September 22, 2025 5:23 pm 0 comment
இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட, முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களில் இணையும் செயன்முறை ஆரம்பமாகியுள்ளது.
அதற்கமைய, இலங்கை மின்சார சபை ஊழியர்களில் ஒரு பகுதியினர் மேற்கூறிய நிறுவனங்களில் சேர விருப்பம் தெரிவித்து கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
அதற்கமைய, 2025 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தம்) சட்டத்தின்படி நிறுவப்பட்ட தேசிய கட்டமைப்பு கட்டுப்பாட்டு (தனியார்) நிறுவனம், தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவைகள் வழங்கல் (தனியார்) நிறுவனம், இலங்கை மின்சார விநியோக (தனியார்) நிறுவனம், இலங்கை மின்சார உற்பத்தி (தனியார்) நிறுவனம் ஆகிய நான்கு முழுமையாக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் மின்சார சபை ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள்.
தாம் மேற்படி நிறுவனங்களில் இணைய இணக்கம் தெரிவிப்பதாக, இன்று (22) காலை இலங்கை மின்சார சபைத் தலைமையகத்தில் இலங்கை மின்சார சபைத் தலைவர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலவிடம் அவர்கள் கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த நிகழ்வில் மின்சாரத் துறை சீரமைப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் ஹெடிகல்லேவும் கலந்து கொண்டார்.
நாட்டின் அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ற வகையில், மின்சாரத் துறையை மேம்படுத்துவதற்குத் அவசியமான கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்து செயற்படுத்தும் இந்த மறுசீரமைப்புத் திட்டமானது, இலங்கை மின்சார சபையின் பெரும்பாலான ஊழியர்களின் பாராட்டைப் பெற்றுள்ளதாக, இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் உப செயலாளர் ஜயந்த குணரத்ன தெரிவித்துள்ளார்
மின்சார ஊழியர்கள் விருப்பம் தெரிவித்து கடிதம் கையளிப்பு



