லண்டனில் பள்ளிவாசலுக்கு தீ வைப்பு – 2 பேர் உயிரிழப்பு? | PMD News Live

இங்கிலாந்தின் ஈஸ்ட் சஸெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள பீஸ்ஹேவன் (Peacehaven) நகரில் அமைந்துள்ள Peace Community Centre and Mosque பள்ளிவாசலுக்கு நேற்றிரவு (சனிக்கிழமை) தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது உள்ளே இருந்த இருவர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

சஸெக்ஸ் போலீஸ் இதை “வெறுப்பூட்டும் குற்றமாக” (Hate Crime) விசாரித்து வருகிறது.

சாட்சிகளின் தகவலின்படி, ஒரு முகமூடி அணிந்த நபர், பள்ளிவாசல் முன்பாக நிறுத்தியிருந்த மசூதி தலைவரின் டாக்ஸி வாகனத்திற்கு தீ வைத்தார், அதனால் தீ வேகமாக கட்டட முன்றைக்கு பரவியது.

டோர்பெல் கேமரா வீடியோவொன்றில் குற்றவாளி தீ ஏற்றும் காட்சி பதிவாகியுள்ளது, அது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் இஸ்ரேல்–காசா மோதலுக்குப் பிறகு UK-யில் அதிகரித்து வரும் வெறுப்பூட்டும் தாக்குதல்களின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

Scroll to Top