வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி – 19ம் தேதி வரை கனமழை அபாயம் | நிலச்சரிவு, வெள்ளம் குறித்து எச்சரிக்கை

இலங்கை முழுவதும் மீண்டும் ஒரு காலநிலை திருப்பம்.

வங்காள விரிகுடாவில் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றுச் சுழற்சி மற்றும் நாட்டின் தெற்கு பகுதியை மையமாகக் கொண்ட வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் மிகக் கனமானது வரை மழை பெய்யும் அபாயம் அதிகரித்துள்ளது.

🌊 வங்காள விரிகுடாவில் உருவான புதிய காற்றுச் சுழற்சி

15.12.2025 திங்கட்கிழமை இரவு 11.00 மணியளவில்,

உகந்தை (Ukanthai) பிரதேசத்திலிருந்து சுமார் 408 கிலோமீட்டர் தொலைவில், இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி உருவாகியுள்ளது.

இந்த காற்றுச் சுழற்சி மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்படுவதால், இலங்கையின் வானிலை நிலை மேலும் சிக்கலாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

☁️ தெற்கு இலங்கையை மையமாகக் கொண்ட வளிமண்டல தளம்பல்

இதனுடன் இணைந்து, தெற்கு இலங்கையை மையமாகக் கொண்டு குறைந்த மட்ட வளிமண்டல தளம்பல் நிலவுகிறது.

இந்த இரண்டு காலநிலை அமைப்புகளின் தாக்கத்தால்,

👉 16.12.2025 அதிகாலை முதல்

👉 19.12.2025 வரை

வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில்

மிதமானது முதல் கனமழை, சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

📅 17ம் தேதி – மிக அதிக மழை பெறும் நாள்

17.12.2025 அன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம்.

குறிப்பாக:

வடக்கு கிழக்கு ஊவா மத்திய வடமத்திய சபரகமுவ மேல் மாகாணங்கள்

கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ள பகுதிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

⛰️ நிலச்சரிவு அபாயம் – மலைநாட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக,

கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில்

👉 நிலச்சரிவு அனர்த்தம் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

எனவே, இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள்

16.12.2025 முதல் 19.12.2025 வரை

அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

🌬️ கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று

16.12.2025 முதல்,

வடக்கு கிழக்கு ஊவா தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில்

30–40 கி.மீ/மணிநேரம் வேகத்தில்

சற்று பலத்த காற்று வீசக்கூடும்.

🌊 குளங்கள் நிரம்பியுள்ளன – வெள்ள அபாயம் அதிகரிப்பு

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் உட்பட

நாட்டின் பல பகுதிகளில் உள்ள பல குளங்கள் ஏற்கனவே நிரம்பிய அல்லது நிரம்பும் நிலையை எட்டியுள்ளன.

மேலும்,

நிலம் ஏற்கனவே ஈரப்பதம் நிறைந்த நிலையில் இருப்பதால் கூடுதல் 75 மி.மீ. மழை கூட

சில தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு போதுமானதாக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

🚤 கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு, தென்கிழக்கு, தென் மற்றும் தென்மேற்கு ஆழ்கடல் பகுதிகளில்

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்

👉 பலத்த காற்று மற்றும் உயரமான அலைகள் குறித்து

அதிக அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

⚠️ பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை

கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை தொடர்ந்து கவனிக்கவும் ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள் முன் எச்சரிக்கையுடன் செயல்படவும் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்

– நாகமுத்து பிரதீபராஜா –

Scroll to Top