17ஆவது ஆசியக்கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம் 🏆🏏17ஆவது ஆசியக்கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 28ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் ஆசிய கிண்ணத்திற்காக போட்டியிடவுள்ளன. இலங்கை அணி எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ் அணிக்கு எதிராக தமது முதல் போட்டியை ஆரம்பிக்கவுள்ளது. குழு நிலை போட்டிகளில் எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவுள்ளன. திட்டமிடப்பட்ட 19 போட்டிகளில், இறுதிப் போட்டி உட்பட 11 போட்டிகள் டுபாயில் நடைபெறவுள்ளதுடன் எஞ்சிய எட்டு போட்டிகளும் அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பியனான இந்தியா, எட்டு கிண்ணங்களை ஆசியக்கிண்ண வரலாற்றில் பெற்றுள்ள அணியாகும். இலங்கை 6 தடவைகளும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 2 தடவைகளும் கிண்ணம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
17ஆவது ஆசியக்கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்



