கொழும்பு பல்கலைக்கழக மாணவி (22 வயது) நெத்மி பிரபோதா விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.

மாலையில் பேருந்து இல்லாததால், அவரை நான் என் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். மகள் தலைக்கவசம் அணியவில்லை. எங்களுக்கு முன்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்தது. பின்னால் வந்த ஒரு வேன் திடீரென வலதுபுறம் திரும்பி முச்சக்கர வண்டியைக் கடந்து சென்றது. நாங்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எங்கள் முன்னால் இருந்த வேனின் வலது பக்கத்தில் மோதியதால் நாங்கள் தூக்கி வீசப்பட்டோம்.

எனக்கு சுயநினைவு திரும்பிய போது, ​​நான் மருத்துவமனையில் இருந்தேன். எனது வலது காலும் வலது கையும் காயமடைந்தன என உயிரிழந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top