NPP யின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே , அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் அரசியலுக்கு வருவதற்கு செல்வம் ஒரு தடையல்ல என்றும், அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதுதான் பிரச்சினை. கடந்த ஜூன் 31ஆம் திகதிக்கு முன்னதாகவே தங்களது சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.



