🔴SRILANKA 🔴LATESTமஹிந்த இன்று வெளியேறுகிறார்!

இலங்கையின் முன்னாள் (அதிபர்களுக்கு) ஜனாதிபதிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்து சிறப்பு #வரப்பிரசாதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்..

முன்னாள் அதிபர் #மஹிந்த ராஜபக்ஷ இன்று விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளார் என்று இலங்கை #பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் #மசோதா நேற்று #பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முடிவு செய்ததாக அதே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதன்படி, கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ, #தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளார்.

இதேவேளை முன்னாள் அதிபர்களில் ஒருவரான #மைத்ரிபால சிறிசேனாவும் ஏற்கனவே வெளியேறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

11.09.2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top