பேருந்துகளில் அலங்காரம் மற்றும் துணைக்கருவிகளை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுருந்த பழைய சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 02, 2023 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இந்த மாதம் 09 ஆம் தேதி முதல் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பேருந்துகளில் அலங்காரங்கள் மற்றும் துணைக்கருவிகளை நிறுவுவது தொடர்பான பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த சுற்றறிக்கை 2023 இல் வெளியிடப்பட்டது.
CANCELLED



