📅 2025.09.15 முதல் 2025.09.21 வரை
📍 குச்சவெளி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும்
🕙 தொடக்கம்: 2025.09.15 முற்பகல் 10.00 மணி
குச்சவெளி பிரதேச சபையின் மக்கள் தேவைகள் நேரடியாக நிறைவேற்றப்படும் வகையில் நடமாடும் மக்கள் சேவையை உள்ளூராட்சி மன்ற வாரத்தின் ஒரு பகுதியாக ஒழுங்கு செய்துள்ளது.
இந்த நிகழ்வில்:
குச்சவெளி பிரதேச சபை ஆட்சிக்கு உட்பட்ட தேவைகள்,
பொது நிறுவனங்களின் சேவைகள்,
வட்டார பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள்
நேரடியாக முன்வைக்கலாம்.
அன்றைய தினம் கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர்கள், மாவட்ட ஆணையாளர், பிரதேச செயலாளர் , குச்சவெளி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பங்கேற்று உங்களின் விடயங்களுக்கு தீர்வு காண உள்ளனர்.
👉 ஏற்கெனவே தனிப்பட்ட முறையில் முறைப்பாடு செய்தவர்கள் மற்றும் நிறுவனங்களும் கலந்து கொள்ளலாம்.
👉 குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சமூகமளிக்க அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.



