கிண்ணியா மண்ணிலிருந்து

கிண்ணியா மண்ணிலிருந்து உலகலாவிய ரீதியில் மீண்டும்  ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் 5 வயது மாணவன் அக்லான் பிலால்

Mental Math World Cup (MMWC) 2025
Live Math Competitions and League (Live MCL) என்ற நிறுவனம் நடாத்திய உலகளாவிய ஆன்லைன் மனக் கணிதப் போட்டியில் 57 நாடுகளிலிருந்தும்  8,000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

இலங்கை சார்பாக பங்கேற்றிய  அக்லான் பிலால் தொடர் போட்டியின் பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இறுதிப் போட்டியில் 100 மனக்கணித அறிவியல் வினாக்களுக்கான விடைகளை 4 நிமிடம் 23 செக்கன்களில் விடையளித்து 1000 மதிப்பெண்களை பெற்றார். இதன் மூலம் இலங்கையில் முதலாம் இடத்தையும் உலகளாவிய ரீதியில்  பதினைந்தாம்  இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
5 வயதுடைய அக்லான் பிலால்  Kinniya Challenger  பாலர் பாடசாலையில் கல்வி பயின்று வருகிறார்.

இவர் தனது எண்கணித ஆற்றலால் ஏற்கனவே இரண்டு முறை உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். Law of exponents and large digit numbers என்பவற்றுக்கு விளக்கமளித்த முதலாவது சிறுவன் என்ற சாதனையை கடந்த ஆண்டு நிகழ்த்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து கிண்ணியாவின் little scientist பட்டமும் வழங்கி  கௌரவிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top