சந்தேகத்துக்கிடமான சூழ்நிலைகளில் உயிரிழந்த இரண்டு ஆண்களின் சடலங்கள் திங்கட்கிழமை தெஹிவளை மற்றும் கிராண்ட் பாஸ் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, 23 வயதுடைய இளைஞர் ஒருவர் தெஹிவளையில் சிரிவரதன மாவத்தையில் உள்ள வீடொன்றின் உள்ளே சந்தேகத்துக்கிடமான சூழ்நிலைகளில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரது மரணத்திற்கான விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கிராண்ட் பாஸ் இங்குருக்கடே சந்திப்பின் அருகிலுள்ள கால்வாயின் அருகே நேற்று மாலை ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் சுமார் 35 முதல் 40 வயதுக்குள் இருப்பார் என கருதப்படுகிறது.
அவரது மரணத்திற்கான விசாரணைகளை கிராண்ட் பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


