ஐ.நா. பொதுச் சபை அமர்வில் பங்கேற்க ஜெனீவா நோக்கி புறப்பட்டார்
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (04) காலை ஜெனீவா நோக்கி நாட்டை விட்டு புறப்பட்டார்.
அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சுனா எம்.பி தனது பயணத்தினை குறித்த காணொளியை தனது உத்தியோகபூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில், அவர் விமான நிலையத்தில் பயணத்திற்குத் தயாராகி கொண்டிருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.



