மட்டக்களப்பு வவுணதீவு வாதகல்மடுவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி.!!
திங்கட்கிழமை (20)அதிகாலை வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில் குறித்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில், தகரத்தினால் அமைத்த வீட்டினுள் இருந்த நெல்லினை உண்பதற்காக வந்த காட்டு யானையை கண்டு பயத்தில் வெளியே ஓடிய போது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதாக அறிய முடிகிறது.
இச்சம்பவத்தில் மரணமானவர் நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து மலர் வயது 58 என்பவராவார்.
சம்பவ இடத்திற்கு வந்த வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன்.
வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைவாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப் பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டு விசாணைகளை மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பணித்துள்ளார்.
தாய் பலி



