அக்ரா நகரை அதிரவைத்த $2 மில்லியன் (சுமார் ரூ. 670 மில்லியன்) பொன்ன் மோசடி வழக்கில், ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முகமது ஹிஸ்புல்லா ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 11 சந்தேக நபர்களுக்கு அக்ரா நீதிமன்றம் (Accra Circuit Court) இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
🔸 சம்பவம் எப்படி நடந்தது?
2023 ஆம் ஆண்டு, குற்றவாளிகள் பெரிய அளவில் தங்கம் வழங்குவதாக கூறி டாக்டர் ஹிஸ்புல்லாவிடம் இருந்து $2 மில்லியன் பெற்றதாக கானா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பணம் பெற்ற பிறகு அவர்கள் தங்கத்தை வழங்கவில்லை. பின்னர், 50 கிலோ தங்கம் வழங்குவதாகவும் ஒப்பந்தம் ஒன்றையும் காட்டியதாகவும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
🔸 கைது மற்றும் விசாரணை
கானா தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் அக்டோபர் 16 அன்று அக்ரா நகரில் உள்ள Weija SCC பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 11 பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து தங்கம் போன்ற தோற்றம் கொண்ட இரண்டு உலோகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வக பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
🔸 நீதிமன்ற நடவடிக்கை
Abdul Rauf Adam, Alhmamoudi Saleh, Yaw Attah Antwi உள்ளிட்ட 11 பேருக்கும் தலா 500,000 கானா சீடிஸ் (சுமார் $33,000) ஜாமீனில் விடுதலை அளிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் இரண்டு ஜாமீனாளர்களை வழங்க வேண்டும், அதில் ஒருவர் நிலம் உடையவராக இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைவரும் குற்றச் சதி, போலி வாக்குறுதி மூலம் மோசடி மற்றும் முயற்சித்த மோசடி குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல நவம்பர் 20 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
🌍 இந்த வழக்கு கானா–இலங்கை இடையிலான சர்வதேச குற்ற விசாரணைகளில் முக்கிய இடம் பெறும் என கூறப்படுகிறது.



