Ameerkhan

முன்னாள் சிரியா அதிபர்

ரஸ்யா –  மாஸ்கோவில் நடந்த கொலை முயற்சியில், சிரிய முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் உயிர் பிழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் சிரியா அதிபர் Read More »

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பு

– 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சி வெற்றி மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்திவருகின்றது. இதுபோன்ற சூழலில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. மனித உடலின் ஒரு பகுதியில் அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி புற்றுநோய் என்று அழைக்கப்படுவதுடன், அது ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால்,

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பு Read More »

சவூதி அரேபிய பாலைவன பாறைகளில் கண்டு பிடிக்கப்பட்ட சுமார் 13,000 வருடங்களுக்கு முற்பட்ட ஓவியங்கள்

சவூதி அரேபியாவின் அல் நபுத் பாலைவனப்பகுதியில் 13000 – 16000 வருடங்களுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். 176 ஓவியங்கள் அடங்கிய இந்த தொகுப்பில் ஒட்டகங்கள், ஐபெக்ஸ்கள், குதிரைகள், விண்மீன்கள் மற்றும் அழிந்துபோன 130 அரோச்களின் வாழ்க்கை வரலாற்றுடன் கூடிய படங்கள் வரையப்பட்டிருக்கின்றன. மூன்று மீற்றர் நீளம் கொண்ட படங்கள் சாதாரணமாக மனிதர்கள் அணுகமுடியாத உயரமான பாறைகளில் வரையப்பட்டிருக்கின்றது, இது பண்டைய கால கலைஞர்களின் குறிப்பிடத்தக்க திறமை மற்றும் முயற்சிகளையும் எடுத்துக்காட்டுகிறது. By 🖊️razana manaf

சவூதி அரேபிய பாலைவன பாறைகளில் கண்டு பிடிக்கப்பட்ட சுமார் 13,000 வருடங்களுக்கு முற்பட்ட ஓவியங்கள் Read More »

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு பெண்கள் மர்மமான முறையில் மரணம்

பாணந்துறையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திடீரெனவும் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் பெண்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றுள்ளன. இவ்வாறு உயிரிழந்த 28 வயதான திலினி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் நேற்று பிற்பகல் அலுபோமுல்லவில் நடைபெற்றுள்ளது.இரத்த உறைவுமற்றைய யுவதியான 19 வயதான மலிஷாவின் இறுதிச் சடங்குகள் வாதுவையின் வெரகாமாவில் நடைபெற்றுள்ளன.திலினியின் மரணத்திற்குக் காரணம் அவரது உடலின் முக்கிய இரத்த நாளத்தில் உருவான இரத்த

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு பெண்கள் மர்மமான முறையில் மரணம் Read More »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தமை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து முறையான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக அவர் இதன்போது கூறியுள்ளார். அத்துடன், விசாரணைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதல் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் Read More »

கொலம்பியா ஜனாதிபதி

கொலம்பியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நான் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார். சர்வதேச சட்ட மீறல்களுக்கு இஸ்ரேலைப் பொறுப்பேற்கச் செய்யவும்,  மனித உரிமைகளை ஆதரிக்கவும், பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்கவும் கொலம்பியா தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை எனவும் கொலம்பிய ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கொலம்பியா ஜனாதிபதி Read More »

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு

உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 02 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 02 நிமிடங்களாக குறைந்துள்ளது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்துக்கு ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 625 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. இரு மலைகளை இணைக்கும் விதமாக இந்தப் பாலம் மிகவும் அழகுடனும், சிறப்பாகவும் அமைந்துள்ளது. இதுவரை இப்பகுதியைக் கடக்க

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு Read More »

இலங்கையில் இலவச பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் தடை:

பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பதற்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு ஒரு புதிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கைகளைக் கோரி, சுற்றாடல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதம் முதல், பல்பொருள் அங்காடிகள் (supermarkets) மற்றும் பிற சில்லறை வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பைகளுக்குக் கட்டணம் வசூலிப்பது

இலங்கையில் இலவச பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் தடை: Read More »

பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கதிர்காமம், வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து 74 T56 ரக மெகசின்கள், 35 LMG ரக ட்ரம்ஸ் மற்றும் 05 MPMG ட்ரம்ஸ் பொக்ஸ் உள்ளிட்ட பல இனங்காணப்படாத மெகசின்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் தோட்டாக்களுடன் கூடியது என சந்தேிக்கப்படும் 2 பெட்டிகளும் ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படும் 2 பொதிகளும் குறித்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் இராணுவத்தினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதையடுத்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெஹெரகல நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம்

பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் பதவியேற்றுள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ்.அருள்ராஜ்   அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று (26) திகதி உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி ஜே.ஜே.முரளிதரன் நேற்று (25) முதல் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான  ஜே.எஸ்.அருள்ராஜ்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் பதவியேற்றுள்ளார் Read More »

ஜப்பான் உருவாக்கிய பயோ-ஜெல் பிணைப்பு – சில விநாடிகளில் காயம் மூடுகிறது!

மருத்துவ துறையில் புரட்சிகரமான கண்டுபிடிப்பாக ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய பயோ-ஜெல் பிணைப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த சிறப்பு ஜெல், காயங்களை சில விநாடிகளில் மூடுவதோடு, இரத்தப்போக்கையும் தொற்றையும் தடுக்கும். இதனால், பாரம்பரிய காயத் தையல் முறைகள் இனி தேவையில்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது. அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் போர்க்கள சிகிச்சைகளில் இது உயிர்களை காப்பாற்ற உதவும் என மருத்துவர்கள் நம்புகின்றனர். சாதாரண தையலுக்கு நேரம், வலி மற்றும் மீண்டும் அகற்றுதல் தேவைப்படும் நிலையில், இந்த ஜெல்

ஜப்பான் உருவாக்கிய பயோ-ஜெல் பிணைப்பு – சில விநாடிகளில் காயம் மூடுகிறது! Read More »

ஒலுவில் கைவிடப்பட்ட குழந்தை

ஒலுவில் – களியோடை ஆற்று பகுதியில் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது வேண்டுமென்று உருவாக்கப்பட்ட கட்டுக்கதை! குழந்தையின் தாய் – தந்தை கைது,விசாரணையில் பல விடயங்கள் அம்பலம்! ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள். தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள்

ஒலுவில் கைவிடப்பட்ட குழந்தை Read More »

நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் பல நூற்றாண்டு பழமையான தேவாலயம் இடிந்து விழுந்தது.!! பிலிப்பைன்ஸின் போகோ நகரத்தைத் தாக்கிய 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்  ஏற்ப்பட்டுள்ளது. செபு முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டதைத் தொடர்ந்து, டான்பண்டாயனில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான சாண்டா ரோசா டி லிமாவின் மறைமாவட்ட ஆலயம் ஓரளவு இடிந்து விழுந்ததாக திருச்சபை உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்

நிலநடுக்கம் Read More »

Scroll to Top