ஜனாதிபதி அனுரகுமாரவின் முதல் வருடத்தில் இலங்கை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். “கடந்த ஒக்டோபர் முதல் இன்று வரை, இலங்கை 1.015 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. இவை கையெழுத்திடப்பட்ட அல்லது உறுதியளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் அல்ல, ஆனால் நிறைவேற்றப்பட்ட நிதிகள்” என்று அவர் கூறினார். இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) உண்மைகளை மறுபரிசீலனை செய்யலாம் என்று அமைச்சர் ரத்நாயக்க இன்று (09)
17ஆவது ஆசியக்கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்
17ஆவது ஆசியக்கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம் 🏆🏏17ஆவது ஆசியக்கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 28ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் ஆசிய கிண்ணத்திற்காக போட்டியிடவுள்ளன. இலங்கை அணி எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ் அணிக்கு எதிராக தமது முதல் போட்டியை ஆரம்பிக்கவுள்ளது. குழு நிலை போட்டிகளில் எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவுள்ளன. திட்டமிடப்பட்ட
பிரித்தானிய நாட்டின் வரலாற்றில், முதல் முறையாக அந்நாட்டின் முக்கிய உயர் பதவிகளில் ஒன்றுக்கு, உள்துறை செயலாளர்(Home Secretary) பொறுப்புக்கு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 44 வயது ஷபானா மஹ்மூத் எனும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
2010 இல் மிக குறைந்த வயதில் பர்மிங்ஹாமில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஷபானா மஹ்மூத், இங்கிலாந்து அரசியலிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்தவர்.
இன்று செப்டம்பர் 08,அனைத்துலக எழுத்தறிவு நாள்
உலகெங்கும் செப்டம்பர் 08ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 1966ம் ஆண்டு தொடக்கம் இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும். உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில்










