Ameerkhan

போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு

இலங்கை கடற்படையினரால் தென் கடற்பரப்பில் இன்று (20) போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு மற்றும் அதிலிருந்த 6 மீனவர்களும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்த மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த படகிலிருந்து 15 போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் 300 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ் மற்றும் […]

போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு Read More »

யாழில் போதைப்பொருள் விற்பனை கும்பல் கைது

யாழ் நகரப் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பிரதான சந்தேகநபர்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பிரதான சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் முறையே 6 கிராம் மற்றும் 2

யாழில் போதைப்பொருள் விற்பனை கும்பல் கைது Read More »

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்!

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த 9 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் பிறந்த இந்த இரட்டைக் குழந்தைகளில், பெண் குழந்தை கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது. இந்நிலையில், ஆண் குழந்தைக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்டதை அடுத்து குழந்தை மயக்கமடைந்துள்ளது. உடனடியாக

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்! Read More »

ரணிலுக்கு எதிரான வழக்கு: ஒரு மாதத்தில் விசாரணை நிறைவு செய்யப்படும்

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று சட்டமா அதிபர் இன்று (19) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தனக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தாக்கல் செய்திருந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர்

ரணிலுக்கு எதிரான வழக்கு: ஒரு மாதத்தில் விசாரணை நிறைவு செய்யப்படும் Read More »

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (130) 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.10 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம் Read More »

கைதான அநுர வல்பொலவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொலவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதான அநுர வல்பொலவிற்கு பிணை Read More »

ஐஸ் போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தப்படுவது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மொரட்டுமுல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுபெத்த பிரதேசத்தில் இன்று (17) காலை முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிடப்பட்டபோது, 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அங்குலானை பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, அவரது மனைவியிடமிருந்து மேலும் 10 கிராம்

ஐஸ் போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது Read More »

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை!

பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தினமும் பொதுச் சந்தையில் உள்ள மரக்கறிச் சந்தை மற்றும் மீன் சந்தை என்பவற்றுக்கு வருகை தருவது வழக்கம். எனினும், இன்றைய தினம் (16) மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மிகவும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். பொதுச்

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை! Read More »

போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவ சுற்றறிக்கை

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கு சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (16) களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், நாளையே (17) கல்விச் செயலாளர் ஊடாக அந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படும் எனக் கூறினார். அதன்படி, அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கான சுற்றறிக்கைகள் அரச நிர்வாகச் செயலாளர் ஊடாக

போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவ சுற்றறிக்கை Read More »

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டமளிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல் Read More »

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதி விபத்து

மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (15) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் படகுடன், கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய மற்றுமொரு மீனவரின் படகு மோதியதில் இரண்டு படகுகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. குறித்த விபத்து தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு படகு கரை திரும்பிய நிலையில், மற்றைய படகு கடலில் மூழ்கியது. பின்னர் அந்தப் படகு மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும்,

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதி விபத்து Read More »

போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய இரண்டு இடங்கள் சுற்றிவளைப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் போதைப்பொருள் பொட்டலங்களை அடையாளம் காணப் பயன்படுத்தும் குறியீட்டு ஸ்டிக்கர்களை உருவாக்கும் இடமொன்றை பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் சுற்றிவளைத்துள்ளது. இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் பல குறியீட்டு ஸ்டிக்கர்கள் அடங்கிய தொகுதியைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் போதைப்பொருள் பொட்டலங்களை அடையாளம் காணப் பயன்படுத்தும் குறியீடுகளை உருவாக்கும் இடம் கல்கிசையில் இருப்பதாக பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு

போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய இரண்டு இடங்கள் சுற்றிவளைப்பு Read More »

யாழில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். சுமார் ஐந்து இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது அனைவரும் கயிறு கட்டி நீராடியுள்ளனர். அதன் பின்னர் அனைவரும் வெளியேறிய நிலையில், ஒருவர் மாத்திரம் தொடர்ந்து நீராடியுள்ளார். அவரை வருமாறு ஏனையவர்கள் அழைத்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன’ சிறிது

யாழில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு Read More »

Scroll to Top