Ameerkhan

செய்திகள்WhatsApp ஊடான நிதி மோசடி அதிகரிப்பு

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக அதன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார். வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

செய்திகள்WhatsApp ஊடான நிதி மோசடி அதிகரிப்பு Read More »

செய்திகள்இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் கலந்துரையாடல்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (03) புது டில்லியில் இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry – CII) சிரேஷ்ட அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடினார். 1895 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பானது, உற்பத்திகள், சேவைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகள் ஊடாக 9,000 இற்கும் மேற்பட்ட நேரடி

செய்திகள்இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் கலந்துரையாடல் Read More »

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்தி சந்தேக நபரொருவரை அதிகாரிகள் கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது Read More »

செய்திகள்சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக

செய்திகள்சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு Read More »

செய்திகள்வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளைய தினம் (03) கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் வெப்பச் சுட்டியானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

செய்திகள்வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை Read More »

செய்திகள்இந்தியா, தென்னாபிரிக்காவிற்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு இடையில் தற்போது மும்பையில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து. இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Shafali Verma அதிகபட்சமாக 87 ஓட்டங்களையும், Deepti Sharma 58

செய்திகள்இந்தியா, தென்னாபிரிக்காவிற்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு Read More »

செய்திகள்தேசிய அடையாள அட்டை விநியோகம் தடையின்றி

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது 15 இலட்சம் விண்ணப்பங்கள் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காகக் குவிந்துள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது. இந்த அடையாள அட்டைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் அச்சிட்டு விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அத்துடன், தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தினந்தோறும் திணைக்களத்துக்கு வருகை தரும் ஏனைய பொது விண்ணப்பதாரிகளுக்கும் தடையின்றி தொடர்ச்சியாக தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. அந்த முழுமையான அறிவிப்பு

செய்திகள்தேசிய அடையாள அட்டை விநியோகம் தடையின்றி Read More »

போதைப்பொருள் படகின் உரிமையாளருக்கு தடுப்புக் காவல்

போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் நேற்று (1) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, நாட்டின் மேற்குப் பகுதியில் ஆழ்கடலில் வைத்து போதைப்பொருள் தொகையுடன் இந்த நெடுநாள் மீன்பிடிப் படகை கைப்பற்றினர். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த மீன்பிடிப் படகின் உரிமையாளர் நேற்று மாலை காலி பிரதேசத்தில்

போதைப்பொருள் படகின் உரிமையாளருக்கு தடுப்புக் காவல் Read More »

ஹம்பாந்தோட்டையில் யானைகளை விரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இன்று (02) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்சார வேலியை உடைத்து, கிராமங்களுக்குள் படையெடுத்த காட்டு யானைகளை மின்சார வேலிக்கு அப்பால் நகர்த்தி, அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள், காட்டு யானைகளின் உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இது திட்டமிடப்பட்டுள்ளது. வனவிலங்கு அதிகாரிகள், விமானப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உட்பட சுமார் 2,000 அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் இணைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டையில் யானைகளை விரட்டும் நடவடிக்கை ஆரம்பம் Read More »

திருகோணமலையில் அதிர்ச்சி! – இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று (01) அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் திருகோணமலை தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த சிப்பாயின் உத்தியோகபூர்வ துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், இது உயிர் மாய்ப்பாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. சம்பவத்தில் குருநாகல், மந்துராகொட, கொட்டுஹேனையைச் சேர்ந்த 30 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாகத் திருகோணமலை தலைமையக காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும்

திருகோணமலையில் அதிர்ச்சி! – இராணுவ சிப்பாய் உயிரிழப்பு Read More »

யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ருவான்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி Read More »

திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்

திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (2) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் Read More »

முழு நாடுமே ஒன்றாக சுற்றிவளைப்பில் 1,314 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைகளில் இருந்து 1 கிலோகிராம் 202 கிராம் ஐஸ், 863 கிராம் 137 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் குஷ் உள்ளிட்ட பல போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 31 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. அவர்களில் நான்கு பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்து

முழு நாடுமே ஒன்றாக சுற்றிவளைப்பில் 1,314 பேர் கைது Read More »

Scroll to Top