Ameerkhan

வனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம்

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1995 என்ற புதிய அவசரத் தொலைபேசி இலக்கம் ஊடாக வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க முடியும் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது

வனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம் Read More »

சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ஓட்டங்களை பெற்றுள்ளார். தமது ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில், எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும்

சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு Read More »

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தை

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம் Read More »

பல்வேறு குற்றங்களுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது

கொழும்பு வடக்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (01) முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் லெல்லம பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 26 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதான சந்தேகநபர், மட்டக்குளி, சமித்புர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் குறித்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக

பல்வேறு குற்றங்களுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது Read More »

கிளிநொச்சியில் கோர விபத்து

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இன்று (11) மாலை 5.00 மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் ரக வானமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் கோர விபத்து Read More »

அதிகளவான வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஐவர் கைது

தீர்வை வரியின்றி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் 5 பேர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாக காலியில் இன்று (11) மாலை நடத்தப்பட்ட விசேட தேடுதலின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 95 மூட்டைகளில் சுமார் 19,000 சிகரெட்டுகள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் மதிப்பு சுமார் 2 மில்லியன் ரூபாய் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேக நபர்கள் போத்தல மற்றும் மிலிதுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று

அதிகளவான வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஐவர் கைது Read More »

சுற்றுலா சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை

இலங்கையின் சுற்றுலாத் துறையில் விரைவான வளர்ச்சியை அடைய சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வௌிவிவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தையும் இலக்கையும் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த அனைத்து நிறுவனங்களின் ஒன்றிணைப்பது அவசியம் என்பதால், இதற்காக ஒரு தேசிய சுற்றுலா ஆணைக்குழு ஒன்றை நிறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய சுற்றுலா ஆணைக்குழு மூலம் மாவட்ட

சுற்றுலா சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை Read More »

பத்மே ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டமை அம்பலம்!

கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அண்மையில் கண்டறிந்துள்ளது. அவருடைய கறுப்புப் பணம், நாட்டின் பிரபல நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அதன் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் நேரடி மேற்பார்வையிலும், தலைமை பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வாவின்

பத்மே ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டமை அம்பலம்! Read More »

அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தடுமாறுகிறது – சஜித்

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.  மாளிகாவத்தை பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.  சட்டம் ஒழுங்கு உரிய வகையில் நிறைவேற்றப்படாமையினால் நாட்டில் போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளது.  அரசாங்கம் கூறும் வகையில் பாதாள உலக குழுக்களை முற்றாக ஒழித்து போதைப்பொருள் மற்றும், துப்பாக்கிச் சூடுகள் நிறுத்தப்பட வேண்டும்.  அச்சமின்றி மக்களுக்கு சேவை செய்ய மக்கள் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம்

அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தடுமாறுகிறது – சஜித் Read More »

இஸ்ரேலில்

இஸ்ரேலில் புதிய வைரஸ் தொற்று பச்சிளங்குழந்தைகள் 8 பேர் பலி. இஸ்ரேல் சுகாதாரத்துறை தகவல்? பயங்கரவாத குஸ்ரேல் காசா பச்சிளங் குழந்தைகளை ரெப்ரிஜிரேட்டல் வைத்து தொடர் இனப்படுகொலை செய்தது நினைவிருக்கும்.?/கர்மா?

இஸ்ரேலில் Read More »

பிரபல வர்த்தகர்

புதிய காரில் போதைப்பொருளுடன் சிக்கிய யாழ் பிரபல வர்த்தகரின் மகன். யாழ் நகரில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும் ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில்

பிரபல வர்த்தகர் Read More »

கடத்தப்பட்டார்

சூடான் பத்திரிகையாளர் கடத்தப்பட்டார் அல் ஜசீரா முபாஷர் நிறுவனத்தின் எல் ஃபாஷர் நிருபர் முஅம்மர் இப்ராஹிம், முற்றுகையிடப்பட்ட நகரிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற RSF போராளிகளால் கடத்தப்பட்டார். இப்ராஹிம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் குண்டுவீச்சுகளின் மத்தியில் பணியாற்றி, RSF நடத்திய கொடூரங்களையும் பட்டினி நிலையும் பதிவு செய்து வந்தார்.

கடத்தப்பட்டார் Read More »

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துருக்கி குடியரசுத் தலைவர் எர்டோவான் சந்திப்பு

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இன்று அங்காராவில் துருக்கி ஜனாதிபதி ரெசப் டாயிப் எர்டோகனை சந்தித்து, 40 யூரோஃபைட்டர் டைபூன் போர் விமானங்கள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை முடிவு செய்ய உள்ளார்.. இந்த திட்டத்தின் கீழ், கத்தார் மற்றும் ஓமானில் இருந்து 12 பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானங்களை துருக்கி உடனடியாகப் பெறும், மேலும் 28 புதியவை பின்னர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துருக்கி குடியரசுத் தலைவர் எர்டோவான் சந்திப்பு Read More »

Scroll to Top