Nifaris

புத்தளம் மாநகர சபையிலும் NPP வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திலுள்ள புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 12 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, ஆதரவாக 7 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஓர் உறுப்பினர் வாக்களிப்பிலிருந்து தவிர்த்துக்கொண்டதுடன், இதற்கமைய புத்தளம் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது. மாநகர முதல்வர் எம்.எஃப். ரின்ஸாத் அஹமட், வரவு செலவுத் திட்ட அறிக்கை முதன்முறையாக […]

புத்தளம் மாநகர சபையிலும் NPP வரவு செலவுத் திட்டம் தோல்வி Read More »

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த வாகனம் விபத்து

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி சப்புகஸ்கந்த பகுதியில் இன்று (11) இரவு விபத்து இடம்பெற்றுள்ளது. இரவு 7.45 மணியளவில் சப்புகஸ்கந்த, தெனிமல்ல பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் காரில் ஒரு பெண்ணும் சிறு குழந்தையும் இருந்துள்ளதுடன், அவர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். அதற்கமைய பெண் கிரிபத்கொடை வைத்தியசாலையிலும், சிறு குழந்தை சிகிச்சைக்காக ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த வாகனம் விபத்து Read More »

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

தெஹிவளை “A க்வாடஸ்” விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையே காணப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி Read More »

கற்பிட்டியில் ஐஸ் மீட்பு தொடர்பில் நால்வர் கைது

கற்பிட்டி பகுதியில் 78 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கற்பிட்டி இப்பன்தீவு கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது, 63.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் 14.5 கிலோகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது. இதனிடையே, போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்கும் நடவடிக்கையின் கீழ் கடந்த

கற்பிட்டியில் ஐஸ் மீட்பு தொடர்பில் நால்வர் கைது Read More »

யாழ்ப்பாணம் பழைய பூங்கா உள்ளக விளையாட்டரங்குப் பணிகள் நிறுத்தம்

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்டு வரும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு, யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில், சுமார் 12 பரப்பளவு காணியைக் கையகப்படுத்தி, உள்ளக விளையாட்டரங்கு அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது. கடந்த 23ஆம் திகதி

யாழ்ப்பாணம் பழைய பூங்கா உள்ளக விளையாட்டரங்குப் பணிகள் நிறுத்தம் Read More »

பங்களாதேஷிடமிருந்தும் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள்!

இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள அனர்த்த நிலையின் பின்னர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சீரமைப்புப் பணிகளுக்காக, பங்களாதேஷ் அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று இன்று (03) பிற்பகல் நாட்டை வந்தடைந்தது. அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான ‘C-130’ விமானம் ஒன்றே இவ்வாறு வந்ததுடன், அதில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்குகின்றன. இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸினால் நிவாரணப் பொருட்கள் முறைப்படி கையளிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மயூரி பெரேரா அப்பொருட்களைப்

பங்களாதேஷிடமிருந்தும் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள்! Read More »

கொழும்பு – கண்டி வீதி கடுன்னாவ பகுதி மீண்டும் மூடல்

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (26) இரவு 10 மணி முதல் மீண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவு காரணமாக முன்னதாக குறித்த வீதி கனேதென்ன பகுதியில் மூடப்பட்டிருந்தது. பின்னர் ஒரு வழி பாதையாக திறக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் அந்த வீதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி வீதி கடுன்னாவ பகுதி மீண்டும் மூடல் Read More »

வாகங்களின் விலை குறைவடைந்துள்ளதாக – இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது வாகனங்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். இன்று (26) முற்பகல் மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொருளாதார

வாகங்களின் விலை குறைவடைந்துள்ளதாக – இலங்கை மத்திய வங்கி ஆளுநர் Read More »

கடுகன்னாவ மண்சரிவு – NBRO பரிந்துரையுடன் அறிக்கை

கீழ் கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் ஆய்வு செய்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அப்பகுதிக்கு உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நிரந்தரத் தீர்வுகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. கேகாலை மாவட்டச் செயலாளர், மாவனல்லை பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய பின்னரே வீதியை மீண்டும் திறக்க முடியும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்

கடுகன்னாவ மண்சரிவு – NBRO பரிந்துரையுடன் அறிக்கை Read More »

போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு

இலங்கை கடற்படையினரால் தென் கடற்பரப்பில் இன்று (20) போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு மற்றும் அதிலிருந்த 6 மீனவர்களும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்த மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த படகிலிருந்து 15 போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் 300 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ் மற்றும்

போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு Read More »

யாழில் போதைப்பொருள் விற்பனை கும்பல் கைது

யாழ் நகரப் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பிரதான சந்தேகநபர்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பிரதான சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் முறையே 6 கிராம் மற்றும் 2

யாழில் போதைப்பொருள் விற்பனை கும்பல் கைது Read More »

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்!

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த 9 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் பிறந்த இந்த இரட்டைக் குழந்தைகளில், பெண் குழந்தை கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது. இந்நிலையில், ஆண் குழந்தைக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்டதை அடுத்து குழந்தை மயக்கமடைந்துள்ளது. உடனடியாக

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்! Read More »

ரணிலுக்கு எதிரான வழக்கு: ஒரு மாதத்தில் விசாரணை நிறைவு செய்யப்படும்

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று சட்டமா அதிபர் இன்று (19) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தனக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தாக்கல் செய்திருந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர்

ரணிலுக்கு எதிரான வழக்கு: ஒரு மாதத்தில் விசாரணை நிறைவு செய்யப்படும் Read More »

Scroll to Top