Nifaris

கடும் மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (06) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். […]

கடும் மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு Read More »

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பார்வையிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும அவர்களும் கலந்துகொண்டார். தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் நாளை (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி Read More »

வித்தியா படுகொலை – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவடைந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்காகக் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உட்பட ஏனைய பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையே இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை

வித்தியா படுகொலை – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு Read More »

செய்திகள்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கி மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருளுடன் முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை கைது செய்தபோது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றும், 9 தோட்டாக்களும், சுமார் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடைய வேபட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என

செய்திகள்துப்பாக்கியுடன் ஒருவர் கைது Read More »

செய்திகள்2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு

2026ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின் போது வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இவ்வுறுதியைத் தெரிவித்தனர். ஆளுநர் செயலகத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற இச்சந்திப்பில், வர்த்தக சங்கத்தால் பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு, அவை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நகர அழகாக்கல்,

செய்திகள்2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு Read More »

செய்திகள்கட்டுக்குறுந்த கடற்கரையில் 30,000,000/- பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்குறுந்த கடற்கரையில் இருந்து இன்று (05) காலை மீட்கப்பட்டது ஹஷிஷ் போதைப்பொருள் என தற்போது தெரியவந்துள்ளது. அங்கு சுமார் 12 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன், அதன் பெறுமதி 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாகம் என்று கூறப்படுகிறது. கடற்கரையில் ஒதுங்கியிருந்த இந்தப் பொதியை முதலில் கண்டது அருகில் உள்ள சுற்றுலா விடுதி ஊழியர்கள் என்பதுடன், அவர்கள் இது குறித்து பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பின்னர், கட்டுக்குறுந்த பொலிஸ்

செய்திகள்கட்டுக்குறுந்த கடற்கரையில் 30,000,000/- பெறுமதியான போதைப்பொருள் மீட்பு Read More »

செய்திகள்பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி – 58 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற வானூர்தி ஒன்று மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியது

செய்திகள்பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி – 58 பேர் பலி Read More »

செய்திகள்நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். ஸோஹ்ரான் மாம்டானி ஒரு ஜனநாயக சோசலிஸ்ட் வேட்பாளர் ஆவார். இவர் உகாண்டாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம்; தாய் ஒடிசாவைச் சேர்ந்த இந்து). இவர் ஜனநாயகக்

செய்திகள்நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு Read More »

வீதி பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் 2025-2026 ஐ செயற்படுத்த அனுமதி

வீதி பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் 2025-2026-ஐ நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை முன்மொழிவுக்கு அமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி கீழே…

வீதி பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் 2025-2026 ஐ செயற்படுத்த அனுமதி Read More »

செய்திகள்WhatsApp ஊடான நிதி மோசடி அதிகரிப்பு

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக அதன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார். வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

செய்திகள்WhatsApp ஊடான நிதி மோசடி அதிகரிப்பு Read More »

செய்திகள்இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் கலந்துரையாடல்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (03) புது டில்லியில் இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry – CII) சிரேஷ்ட அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடினார். 1895 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பானது, உற்பத்திகள், சேவைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகள் ஊடாக 9,000 இற்கும் மேற்பட்ட நேரடி

செய்திகள்இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் கலந்துரையாடல் Read More »

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்தி சந்தேக நபரொருவரை அதிகாரிகள் கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது Read More »

செய்திகள்சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக

செய்திகள்சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு Read More »

Scroll to Top