Nifaris

கிளிநொச்சியில் கோர விபத்து

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இன்று (11) மாலை 5.00 மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் ரக வானமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் கோர விபத்து Read More »

அதிகளவான வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஐவர் கைது

தீர்வை வரியின்றி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் 5 பேர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாக காலியில் இன்று (11) மாலை நடத்தப்பட்ட விசேட தேடுதலின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 95 மூட்டைகளில் சுமார் 19,000 சிகரெட்டுகள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் மதிப்பு சுமார் 2 மில்லியன் ரூபாய் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேக நபர்கள் போத்தல மற்றும் மிலிதுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று

அதிகளவான வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஐவர் கைது Read More »

சுற்றுலா சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை

இலங்கையின் சுற்றுலாத் துறையில் விரைவான வளர்ச்சியை அடைய சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வௌிவிவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தையும் இலக்கையும் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த அனைத்து நிறுவனங்களின் ஒன்றிணைப்பது அவசியம் என்பதால், இதற்காக ஒரு தேசிய சுற்றுலா ஆணைக்குழு ஒன்றை நிறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய சுற்றுலா ஆணைக்குழு மூலம் மாவட்ட

சுற்றுலா சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை Read More »

பத்மே ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டமை அம்பலம்!

கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அண்மையில் கண்டறிந்துள்ளது. அவருடைய கறுப்புப் பணம், நாட்டின் பிரபல நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அதன் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் நேரடி மேற்பார்வையிலும், தலைமை பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வாவின்

பத்மே ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டமை அம்பலம்! Read More »

அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தடுமாறுகிறது – சஜித்

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.  மாளிகாவத்தை பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.  சட்டம் ஒழுங்கு உரிய வகையில் நிறைவேற்றப்படாமையினால் நாட்டில் போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளது.  அரசாங்கம் கூறும் வகையில் பாதாள உலக குழுக்களை முற்றாக ஒழித்து போதைப்பொருள் மற்றும், துப்பாக்கிச் சூடுகள் நிறுத்தப்பட வேண்டும்.  அச்சமின்றி மக்களுக்கு சேவை செய்ய மக்கள் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம்

அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தடுமாறுகிறது – சஜித் Read More »

Scroll to Top