உலக செய்திகள்

கொலம்பியா ஜனாதிபதி

கொலம்பியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நான் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார். சர்வதேச சட்ட மீறல்களுக்கு இஸ்ரேலைப் பொறுப்பேற்கச் செய்யவும்,  மனித உரிமைகளை ஆதரிக்கவும், பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்கவும் கொலம்பியா தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை எனவும் கொலம்பிய ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கொலம்பியா ஜனாதிபதி Read More »

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு

உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 02 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 02 நிமிடங்களாக குறைந்துள்ளது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்துக்கு ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 625 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. இரு மலைகளை இணைக்கும் விதமாக இந்தப் பாலம் மிகவும் அழகுடனும், சிறப்பாகவும் அமைந்துள்ளது. இதுவரை இப்பகுதியைக் கடக்க

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு Read More »

கரூர் பேரணி கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யின் மாநில அளவிலான சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.

தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து, நடிகர்-அரசியல்வாதி விஜய்யின் கட்சியான டிவிகே, தனது மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. டிவிகே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் மூலம் விஜய்யின் சுற்றுப்பயணத்தை நிறுத்தி வைக்கும் முடிவை அறிவித்துள்ளது. “எங்கள் அன்புக்குரியவர்களை இழந்ததில் நாங்கள் வேதனையிலும் துக்கத்திலும் இருக்கும் இந்த சூழ்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு எங்கள் கட்சித் தலைவரின் பொதுக் கூட்ட நிகழ்ச்சி தற்காலிகமாக

கரூர் பேரணி கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யின் மாநில அளவிலான சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. Read More »

நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் பல நூற்றாண்டு பழமையான தேவாலயம் இடிந்து விழுந்தது.!! பிலிப்பைன்ஸின் போகோ நகரத்தைத் தாக்கிய 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்  ஏற்ப்பட்டுள்ளது. செபு முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டதைத் தொடர்ந்து, டான்பண்டாயனில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான சாண்டா ரோசா டி லிமாவின் மறைமாவட்ட ஆலயம் ஓரளவு இடிந்து விழுந்ததாக திருச்சபை உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்

நிலநடுக்கம் Read More »

சீனாவில்

சீனா, பூமியில் இருந்து 36,000 கி.மீ உயரத்தில், 1 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு சுற்றுப்பாதை சூரிய மின் உற்பத்தி நிலையத்தை (orbital solar power plant) கட்டுகிறது. இந்த மாபெரும் தகடு புவிநிலை சுற்றுப்பாதையில் (geostationary orbit) நிலைநிறுத்தப்படுவதால், இது ஒருபோதும் பூமியின் நிழலுக்குள் நுழையாது. எனவே, இது 24/7 சூரிய ஒளியைப் பெறுகிறது. மேகங்கள் இல்லை, இரவு இல்லை, பருவங்கள் இல்லை — வெறும் தூய, தடையற்ற விண்மீன் சக்தி. இது பூமியை அடையும் சூரிய

சீனாவில் Read More »

உலக சாதனை

62 ஆண்டுகளாக 2மீட்டர்வரை நகம் வளர்த்து உலகசாதனை. என்னை கிள்ளிய ஆசிரியரின் நகம் உடைந்ததால் என்னிடம் ஆசிரியர் “இதை வளர்ப்பதன் வலியை நான் உன்னிடம் சொன்னால், உனக்குப் புரியாது” என்று என்னிடம் சண்டை போட்டார்… அன்று, என் ஆசிரியருக்காக வெறுப்புடன் என் நகங்களை வளர்க்க ஆரம்பித்தேன், அதுவும் 62 ஆண்டுகளாக! இதுதான் 82 வயதான ஸ்ரீதர் சில்லால், உலகின் மிக நீளமான நகங்களுக்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். அவரது 2 மீட்டர் நீளமுள்ள நகம் வெட்டப்பட்டு

உலக சாதனை Read More »

காசா போர் நிறுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்புக்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் நன்றி தெரிவிப்பு! காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்பின் நேர்மையான முயற்சிகளை பாகிஸ்தான், கத்தார், ஜோர்டான், ஐக்கியஅரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து வரவேற்றுள்ளன.

காசா போர் நிறுத்தம் Read More »

டொனால்ட் டிரம்பின் காஸா மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் விரிவான திட்டம் அறிவிப்பு!

காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு விரிவான அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: ♦️காசாவை பயங்கரவாதமற்ற பகுதியாக மாற்றுதல்:காசா, பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டு, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லாத ஒரு பகுதியாக மாற்றப்படும். இதன்மூலம், காசாவின் மக்கள் பயனடையும் வகையில் மறுகட்டமைப்பு நடைபெறும், அவர்கள் ஏற்கனவே பல துன்பங்களை அனுபவித்திருக்கின்றனர். ♦️போர் நிறுத்தம் மற்றும் பரிமாற்ற நடவடிக்கைகள்:இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், உடனடியாக போர் நிறுத்தப்படும்.

டொனால்ட் டிரம்பின் காஸா மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் விரிவான திட்டம் அறிவிப்பு! Read More »

பிரதமர் நேத்தன்யாஹு

வெள்ளை மாளிகையிலிருந்து கட்டார் பிரதமரிடம் மன்னிப்பு கோரிய நெதன்யாஹு இ*ஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தோஹாவில் நடந்த வான்வழித் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டார், மேலும் ஒரு பாதுகாப்புக் காவலரின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

பிரதமர் நேத்தன்யாஹு Read More »

ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவை இன்று ஜனாதிபதி ஏ.கே.டி சந்திக்கிறார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (29) ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்க உள்ளார். ஜப்பானில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் கலந்துரையாடல்களில், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீடு, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து கவனம் செலுத்தப்படும். வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான தலைமை ஜனாதிபதி ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய, மூத்த ஜனாதிபதி பொருளாதார

ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவை இன்று ஜனாதிபதி ஏ.கே.டி சந்திக்கிறார். Read More »

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: நால்வர் பலி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள மோர்மன் (Church of Jesus Christ of Latter-day Saints) தேவாலயம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் தீ வைப்புச் சம்பவத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். டெட்ராய்ட் நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் வடக்கேயுள்ள கிரான்ட் பிளாங்க் (Grand Blanc) நகர தேவாலயத்தில், ஞாயிறு காலை ஆராதனைக்காக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம்

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: நால்வர் பலி! Read More »

ஈரான் ஜனாதிபதி

“இஸ்ரேல் மீண்டும் நம்மைத் தாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, உளவுத்துறை அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன, ஆக்கிரமிப்பைச் சமாளிக்க நாங்கள் திட்டங்களைத் தயாரித்துள்ளோம், அவர்கள் நம்மைத் தாக்கினால், அதைச் செயல்படுத்த எங்களிடம் 6 படி திட்டம் உள்ளது” என ஈரானிய ஜனாதிபதி தெரிவித்துள்ளதை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஈரான் ஜனாதிபதி Read More »

Scroll to Top