இலங்கை உடனடி செய்திகள்

ஹெரோயினுடன் கைதான அதிபருக்கு தடுப்பு காவல்

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்காக தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர் இன்று (06) பிற்பகல் அனுராதபுரம் பொலிஸாரால் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அநுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்திற்கு நீதிமன்றம் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது

ஹெரோயினுடன் கைதான அதிபருக்கு தடுப்பு காவல் Read More »

கடும் மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (06) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

கடும் மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு Read More »

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பார்வையிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும அவர்களும் கலந்துகொண்டார். தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் நாளை (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி Read More »

வித்தியா படுகொலை – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவடைந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்காகக் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உட்பட ஏனைய பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையே இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை

வித்தியா படுகொலை – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு Read More »

வடக்கு–கிழக்கில் மழை வரவு ஆரம்பம்: காலநிலை மாற்றம் புதிய திருப்பம் கொடுக்குமா?

05 நவம்பர் முதல் பரவலாக மழை; நிபுணர்கள் கூறும் முக்கிய எச்சரிக்கை! வடகிழக்குப் பருவமழை இன்னும் கணிசமாக ஆரம்பிக்கவில்லை என்ற அச்சம் பலரிடத்தில் நிலவிய நிலையில், இன்று நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு (05.11.2025) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரவலாக மழை பெய்யத் தொடங்கும் என வானிலைத் துறை அறிவித்துள்ளது. 🔹 திருகோணமலை மாவட்டம் முதலில் மழையை வரவேற்கும்! கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டம் நாளை முதல் மழை

வடக்கு–கிழக்கில் மழை வரவு ஆரம்பம்: காலநிலை மாற்றம் புதிய திருப்பம் கொடுக்குமா? Read More »

செய்திகள்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கி மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருளுடன் முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை கைது செய்தபோது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றும், 9 தோட்டாக்களும், சுமார் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடைய வேபட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என

செய்திகள்துப்பாக்கியுடன் ஒருவர் கைது Read More »

செய்திகள்2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு

2026ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின் போது வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இவ்வுறுதியைத் தெரிவித்தனர். ஆளுநர் செயலகத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற இச்சந்திப்பில், வர்த்தக சங்கத்தால் பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு, அவை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நகர அழகாக்கல்,

செய்திகள்2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு Read More »

செய்திகள்கட்டுக்குறுந்த கடற்கரையில் 30,000,000/- பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்குறுந்த கடற்கரையில் இருந்து இன்று (05) காலை மீட்கப்பட்டது ஹஷிஷ் போதைப்பொருள் என தற்போது தெரியவந்துள்ளது. அங்கு சுமார் 12 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன், அதன் பெறுமதி 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாகம் என்று கூறப்படுகிறது. கடற்கரையில் ஒதுங்கியிருந்த இந்தப் பொதியை முதலில் கண்டது அருகில் உள்ள சுற்றுலா விடுதி ஊழியர்கள் என்பதுடன், அவர்கள் இது குறித்து பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பின்னர், கட்டுக்குறுந்த பொலிஸ்

செய்திகள்கட்டுக்குறுந்த கடற்கரையில் 30,000,000/- பெறுமதியான போதைப்பொருள் மீட்பு Read More »

திருகோணமலை கிண்ணியாவில் மீண்டும் அதிர்ச்சி — கால்நடைகளை இலக்கு வைத்து வாள்வெட்டுத் தாக்குதல்! 🐄⚔️

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் மீண்டும் ஒருமுறை மர்ம நபர்களால் கால்நடைகள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூர்வாசிகளின் தகவலின்படி, இத்தாக்குதல் கடந்த இரவு நேரத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தாக்குதலில் சில மாடுகள் மற்றும் ஆடுகள் கடுமையாக காயமடைந்துள்ளன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்போர் அச்சத்திலும் கோபத்திலும் உள்ளனர். கடந்த சில வாரங்களாக இதேபோன்ற தாக்குதல்கள் கிண்ணியாவிலும் அண்டை கிராமங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இது திட்டமிட்ட செயல் என சந்தேகிக்கப்படுவதாகவும்

திருகோணமலை கிண்ணியாவில் மீண்டும் அதிர்ச்சி — கால்நடைகளை இலக்கு வைத்து வாள்வெட்டுத் தாக்குதல்! 🐄⚔️ Read More »

வீதி பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் 2025-2026 ஐ செயற்படுத்த அனுமதி

வீதி பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் 2025-2026-ஐ நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை முன்மொழிவுக்கு அமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி கீழே…

வீதி பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் 2025-2026 ஐ செயற்படுத்த அனுமதி Read More »

செய்திகள்WhatsApp ஊடான நிதி மோசடி அதிகரிப்பு

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக அதன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார். வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

செய்திகள்WhatsApp ஊடான நிதி மோசடி அதிகரிப்பு Read More »

செய்திகள்இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் கலந்துரையாடல்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (03) புது டில்லியில் இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry – CII) சிரேஷ்ட அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடினார். 1895 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பானது, உற்பத்திகள், சேவைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகள் ஊடாக 9,000 இற்கும் மேற்பட்ட நேரடி

செய்திகள்இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் கலந்துரையாடல் Read More »

நாட்டின் முக்கிய கட்டுமான நிறுவனங்களுக்கு கடும் தடை — போக்குவரத்து அமைச்சின் தீர்மானம்!

🔸 கட்டுமான துறையில் அதிர்ச்சி ஏற்படுத்தும் முடிவு! நாட்டின் நான்கு முன்னணி கட்டுமான நிறுவனங்கள், அரசுத் திட்டங்களில் பங்கேற்கும் உரிமையை இழந்துள்ளன. போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, ஒழுங்குமுறை மீறல் மற்றும் தவறான தகவல் வழங்கல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சக அறிக்கையின்படி, கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள் பின்வருமாறு: Consulting Engineers & Contractors (Pvt) Ltd – 3 ஆண்டுகள் தடை V.V. Karunaratne & Company

நாட்டின் முக்கிய கட்டுமான நிறுவனங்களுக்கு கடும் தடை — போக்குவரத்து அமைச்சின் தீர்மானம்! Read More »

Scroll to Top