குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முகமாக ஒரு தந்தையாக அறிவுரைகூறி செயற்பட்ட நீதிபதிக்கு இடமாற்றம்!!
குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முகமாக ஒரு தந்தையை போன்று அறிவுரை கூறி வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக பயாஸ் ரஸ்ஸாக் செயற்பட்டு வந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. நீதிச்சேவை ஆணைக்குழுவினால் எதிர்வரும் 15.09.2025ஆம் திகதிமுதல் 106 நீதிபதிகளுக்கு இடாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றி வந்த பயாஸ் ரஸ்ஸாக் நுட்பமான முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இன்றி தீர்ப்புகளை வழங்கி வந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. அந்தவகையில் மொரவெவ சுற்றுலா நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், […]













