அன்கே கவுடா. இவர் வைத்திருக்கும் லைப்ரரி பற்றி கேள்விப்பட்ட பொழுது ஆச்சரியமாக இருந்தது. 75 வயது இவருக்கு ஹரலஹள்ளி என்ற கிராமம் இவருடையது அது மைசூருக்கு அருகில் இருக்கிறதாம். அவர் தன்னுடைய வீட்டைக் கூட விற்று விட்டார் போல தெரிகிறது. இந்த லைப்ரரி 20 லட்சம் புத்தகங்களைக் கொண்டது புத்தகங்கள் அத்தனையும் பல்வேறு பிரிவில் உள்ளவை இதில் ஐந்தாயிரம் டிக்ஷனரிகள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட foreign edition magazines வேறு இருக்கிறதாம் இவர் மனைவி விஜயலட்சுமி மகன் சாகர் ஆகியோரும் இவருக்கு மிகுந்த துணையாக இருப்பதாக தெரிகிறது.
இந்தியாவில் தனி ஒரு மனிதர் இலவசமாக லைப்ரரி வைத்திருப்பதில் ஆகப்பெரியதில் இவருடைய லைப்ரரியும் அடக்கம். புத்தகங்கள் அருமையான நண்பர்கள். சிறந்த வழிகாட்டி. நல்ல பொழுதுபோக்கு. அடுத்த தலைமுறை யை பண்படுத்தும் பக்குவப்படுத்தும் இடம். 20 லட்சம் புத்தகங்கள் இலவசமாக படிக்க கொடுக்கிறார் 20 வயதில் பஸ் கண்டக்டர் ஆக வாழ்க்கையை தொடங்கிய அன்கே கவுடாஜி! இது போன்ற மனிதர்கள் இருப்பதினால் தான் மழை பொழிகிறது போதும்! அன்கேகவுடா லைப்ரரி freelibrary mysuru ம.பூமா குமாரி













