திருகோணமலையில் யானை தாக்குதலில் முற்றாக சேதமடைந்த வீடு.

திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் வீடொன்றை முற்றாக சேதப்படுத்தியுள்ளன.

இதன்போது வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மற்றும் மின்சார இணைப்புக்களையும் காட்டு யானைகள் சேதமாக்கியுள்ளன.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வெளிநாடு மற்றும் கொழும்புக்கு வேலைக்கு சென்றே இந்த வீடு கட்டப்பட்டதாகவும் வீடு சேதமாக்கப்பட்டுள்ளதால் பொருளாதார இழப்புக்களை சந்தித்துள்ளதாகவும் வீட்டினை திருத்துவதற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

காட்டு யானையின் தாக்குதலால் வீடுகளில் உறங்குவது கூட அச்சமாக இருப்பதாகவும், வெருகல் பகுதியில் தொடர்தேற்சியாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி யானை பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட வீட்டுக்கு நஷ்ட ஈடு வழங்க முன் வர வேண்டும் எனவும் வெருகல் -வட்டவன் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Scroll to Top