யாழ்ப்பாணம் – வடமாகாண மக்களுக்கு அருகாமையில் கடவுச்சீட்டு (Passport) சேவைகளை வழங்கும் வகையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
ஒருநாள், சாதாரண சேவைகள்
இரு அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவை மூலம் கடவுச்சீட்டு பெற முடியும். அதற்கு மேலாக, திருத்தங்கள் மேற்கொள்ளல் மற்றும் 2018க்குப் பிந்தைய தூதரகங்கள் வழியாக வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளுக்கான விரலடையாளப் பதிவு (Finger Print) போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.
நடைமுறைகள்
விண்ணப்பங்கள் காலை 7.00 மணி முதல் நண்பகல் 2.00 மணி வரை ஏற்கப்படுகின்றன. இதற்காக முன்பதிவு தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் (Original), தேசிய அடையாள அட்டை மற்றும் பிரதியுடன் வர வேண்டும். புகைப்படம் அலுவலகத்துக்குள் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டூடியோவில் எடுக்கலாம்.
ஏற்கனவே கடவுச்சீட்டு பெற்றவர்கள் அதனையும் பிரதியையும் கொண்டு செல்ல வேண்டும். திருமணமான பெண்கள் கணவனின் பெயரில் விண்ணப்பிக்க விரும்பின் திருமணச் சான்றிதழ் (Original) அவசியமாகும்.
பிள்ளைகளின் கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கு பெற்றோர் இருவரின் சம்மதக் கடிதம் மற்றும் அடையாள அட்டை பிரதி கட்டாயமாகும். பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் தூதரகத்தின் No Objection Letter வழங்கப்பட வேண்டும். விவாகரத்து அல்லது மரணம் போன்ற சூழல்களில் தேவையான சான்றிதழ்கள் அவசியம்.
கட்டண விவரங்கள்
ஒருநாள் சேவை – ரூ. 20,000.00 சாதாரண சேவை – ரூ. 10,000.00 திருத்தங்கள் – ரூ. 1,200.00 தொலைந்த கடவுச்சீட்டு தண்டப்பணம்: வழங்கப்பட்டு 1 வருடத்திற்குள் – ரூ. 20,000.00 வழங்கப்பட்டு 1 வருடத்திற்கு மேல் – ரூ. 15,000.00
விண்ணப்பப் படிவங்கள்
கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவங்களை குடிவரவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
https://eservices.immigration.gov.lk/onlinetd/OnlineTD/’#/home



