கொழும்பு – கண்டி வீதி கடுன்னாவ பகுதி மீண்டும் மூடல்
கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (26) இரவு 10 மணி முதல் மீண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவு காரணமாக முன்னதாக குறித்த வீதி கனேதென்ன பகுதியில் மூடப்பட்டிருந்தது. பின்னர் ஒரு வழி பாதையாக திறக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் அந்த வீதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கண்டி வீதி கடுன்னாவ பகுதி மீண்டும் மூடல் Read More »













