முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த வாகனம் விபத்து
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி சப்புகஸ்கந்த பகுதியில் இன்று (11) இரவு விபத்து இடம்பெற்றுள்ளது. இரவு 7.45 மணியளவில் சப்புகஸ்கந்த, தெனிமல்ல பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் காரில் ஒரு பெண்ணும் சிறு குழந்தையும் இருந்துள்ளதுடன், அவர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். அதற்கமைய பெண் கிரிபத்கொடை வைத்தியசாலையிலும், சிறு குழந்தை சிகிச்சைக்காக ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த வாகனம் விபத்து Read More »













